கடைசி போட்டியில் 214 ரன் குவித்த பஞ்சாப் கிங்ஸ்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 214 ஓட்டங்கள் குவித்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தனது கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் முதலில் துடுப்பாடியது. அதர்வா டைத்தே, பிரப்சிம்ரன் சிங் இருவரும் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசினார்.
இதன்மூலம் ஜெட் வேகத்தில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. டைத்தே 27 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
PP ? Prabh Power! ?#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi #TATAIPL2024 #SRHvsPBKS pic.twitter.com/uWYB57ijSB
— Punjab Kings (@PunjabKingsIPL) May 19, 2024
இந்த கூட்டணி 55 பந்துகளில் 97 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் வந்த ரோஸோவ் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதற்கிடையில் அரைசதம் விளாசிய பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
ரோஸோவ் 24 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் ஓவரில் சமத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ஷஷாங்க் சிங் (2), அஷுடோஷ் (2) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஜித்தேஷ் ஷர்மா 15 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் 214 ஓட்டங்கள் குவித்தது. நடராஜன் 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் வியாஸ்காந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Our batters have ????? to the occasion! ?
— Punjab Kings (@PunjabKingsIPL) May 19, 2024
Time for our bowlers to help us end our season with a victory! ??#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi #TATAIPL2024 #SRHvPBKS pic.twitter.com/c8ZLszwIvz
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |