டெல்லி கேபிட்டல்ஸை அடித்து நொறுக்கி வெற்றி வாகை சூடிய பஞ்சாப் கிங்ஸ்: பந்துவீச்சில் மாயாஜாலம் காட்டிய வீரர்
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சதமடித்த இளம் வீரர்
அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 167 ஓட்டங்கள் எடுத்தது.
இளம் வீரர் பிரப்சிம்ரன் சிங் 103 ஓட்டங்களும், சாம் கர்ரன் 20 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் டேவிட் வார்னர் மற்றும் சால்ட் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர்.
Arun Sankar/Getty Images
இவர்களது கூட்டணி 6.2 ஓவரில் 69 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின்னர் வந்த வீரர்கள் ஹார்ப்ரீத் பிரார் மாயாஜால சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
டேவிட் வார்னர் அரைசதம்
அதிரடியில் மிரட்டிய டேவிட் வார்னர் 27 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களே எடுத்தது.
அமான் கான் 16 ஓட்டங்களும், பிரவீன் தூபே 16 ஓட்டங்களும் எடுத்தனர். பிரார் 4 விக்கெட்டுகளும், நாதன் எல்லிஸ் மற்றும் ராகுல் சஹார் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Image: AP
PTI Photo