ஷிகர் தவான்- லிவிங்ஸ்டன் அதிரடி: குஜராத் அணியை துவம்சம் செய்த பஞ்சாப்

Hardik Pandya Gujarat Titans Punjab Kings IPL 2022
By Arbin May 03, 2022 07:29 PM GMT
Report

15வது ஐ.பி.எல் தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி 5-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி துடுப்பாட்டம் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 9 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ரிஷி தவனால் ரன் அவுட் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து சாஹா - சாய் சுதர்ஷன் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ரபாடா பந்துவீச்சில் சாஹா, அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து 21 ஓட்டங்களில் வெளியேறினார். அணித்தலைவர் ஹார்திக் பாண்டியா 1 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஒரு முனையில் விக்கெட்கள் மளமளவென சரிய தொடங்கியது. இருப்பினும் ஒரு முனையில் நிதானமாக விளையாடிய சாய் சுதர்சன் 42 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

ஷிகர் தவான்- லிவிங்ஸ்டன் அதிரடி: குஜராத் அணியை துவம்சம் செய்த பஞ்சாப் | Punjab Kings Beat Gujarat By 8 Wickets

சாய் சுதர்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 65 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். டேவிட் மில்லர் 11 ஓட்டங்களுடனும் ராகுல் தெவாட்டியா 11 ஓட்டங்களுடனும் வெளியேற, இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். ஷமி பந்துவீச்சில் சங்வான்-யிடம் கேட்ச் கொடுத்து பேர்ஸ்டோவ் ஒரு ரன்களில் வெளியேறினார்.

ஷிகர் தவான்- லிவிங்ஸ்டன் அதிரடி: குஜராத் அணியை துவம்சம் செய்த பஞ்சாப் | Punjab Kings Beat Gujarat By 8 Wickets

அவரை தொடர்ந்து களமிறங்கிய பனுக ராஜபக்சா, தவான் உடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடிய ராஜபக்சா குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து கடும் சவால் அளித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த தவான் 53 பந்துகளில் 62 ஓட்டங்கள் குவித்தார்.

இதனிடையே, 5 பவுண்டரி 1 சிக்சருடன் 28 பந்துகளில் 40 ஓட்டங்கள் குவித்து ராஜபக்சா ஆட்டமிழந்தார். தொடர்ந்து லிவிங்ஸ்டோன் களமிறங்கினார். ஷமி வீசிய 16-வது ஓவரில் தொடர்ந்து 3 சிக்சர்களை அவர் பறக்கவிட்டார்.

ஷிகர் தவான்- லிவிங்ஸ்டன் அதிரடி: குஜராத் அணியை துவம்சம் செய்த பஞ்சாப் | Punjab Kings Beat Gujarat By 8 Wickets

இறுதியில் 16 ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 145 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. குஜராத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி 5-வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நடப்பு தொடரில் குஜராத் அணி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது.

ஷிகர் தவான்- லிவிங்ஸ்டன் அதிரடி: குஜராத் அணியை துவம்சம் செய்த பஞ்சாப் | Punjab Kings Beat Gujarat By 8 Wickets

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US