ஸ்ரேயாஸ் எடுத்த முடிவு... குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி

Arbin
in கிரிக்கெட்Report this article
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ்
அணியின் வெற்றிக்காக கடைசி கட்டத்தில் தன்னுடைய சதத்தை ஸ்ரேயாஸ் தியாகம் செய்தது கொண்டாடப்பட்டு வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரியான்ஸ் ஆர்யா 47 ஓட்டங்களிலும், அஸ்மத்துல்லா 16 ஓட்டங்களிலும் ஆட்டம் இழக்க மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 97 ஓட்டங்கள் குவித்தார். 19-வது ஓவர் முடிவில் 97 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் தொடர்ந்து அதிரடியாக ஆடுங்கள் என்றே ஷாசாங்கிடம் கூறியுள்ளார்.
இதனை பயன்படுத்தி கொண்ட ஷசாங் கடைசி ஓவரில் 23 ஓட்டங்கள் சேர்த்தார். இது போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்கள் குவித்தது.
இதை அடுத்து 244 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக தமிழக வீரர் சாய் சுதர்சன், குஜராத் அணி கேப்டன் கில்லுடன் களம் இறங்கினர். கில் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 33 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார்.
ஜாஸ் பட்லரும் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 54 ஓட்டங்கள் சேர்த்தார். அதிரடியாக விளையாடி வந்த சாய் சுதர்சன் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 41 பந்துகளில் 74 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இம்பாக்ட் வீரராக களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷஃபான்போர்ட் 28 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை போராடினார். இதனையடுத்து குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்க்கு 232 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் தரப்பில் ஆர்ஸ்தீப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |