சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி மீண்டும் தோல்வி! பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
சொந்த மைதானத்தில் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
மழை குறுக்கீடு
சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி, பலம் வாய்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை (RCB) எதிர்கொண்டது.
மழை காரணமாக தாமதமாகத் தொடங்கிய இந்த ஆட்டம், 14 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கப்பட்டது.
🚨 Just In 🚨
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 18, 2025
We’ll have a 1️⃣4️⃣-over match, with the toss scheduled for 9:30 PM and play set to begin at 9:45 PM! 🤩#PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 #RCBvPBKS pic.twitter.com/ChbQfSmTq0
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
தடுமாறிய பெங்களூரு அணி
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஃபில் சால்ட் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஏமாற்றமளித்தனர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரஜத் பட்டிதார் 23 ஓட்டங்கள் குவித்தாலும், பின்னர் வந்த லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, குருணல் பாண்டியா போன்ற முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இதனால், ஆர்சிபி அணியின் ஸ்கோர் மந்தமாக இருந்தது. இருப்பினும், அணியின் நம்பிக்கை நாயகனாக கடைசி நேரத்தில் களமிறங்கிய டிம் டேவிட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Banger after banger after banger.
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 18, 2025
Ladies and gentlemen, Timmy David. 🥵
pic.twitter.com/x6fJGynfst
குறிப்பாக கடைசி ஓவரில் அவர் விளாசிய ஹாட்ரிக் சிக்ஸர்கள் அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்தது.
இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 ஓவர்களில் 95 ஓட்டங்கள் எடுத்தது.
பஞ்சாப் அபார வெற்றி
96 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பான தொடக்கத்தை பெறாவிட்டாலும், சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
Why fear when Nehal paaji is here!😎pic.twitter.com/fRBVyVRyay
— Punjab Kings (@PunjabKingsIPL) April 18, 2025
பொறுப்புடன் விளையாடிய நேஹல் வதேராவின் 33 ஓட்டங்கள் குவித்து பஞ்சாப் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 12.1 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |