பஞ்சாப் கிங்ஸ் அதிரடி வெற்றி: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அதிர்ச்சி தோல்வி!
நடப்பு ஐபிஎல் 2024 (IPL 2024) சீசனின் 13-வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
லக்னோவின் தடுமாற்றம்
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி லக்னோ ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
Lots of lessons tonight 💪 pic.twitter.com/FEhpzzBa9i
— Lucknow Super Giants (@LucknowIPL) April 1, 2025
இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
மார்க்ரம் (28), ரிஷப் பந்த் (2), நிக்கோலஸ் பூரன் (44), டேவிட் மில்லர் (19 ) என வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஆயுஷ் படோனி (41) மற்றும் அப்துல் சமத் (27) ஆகியோரின் அதிரடி ஆட்டம் லக்னோ அணிக்கு ஓரளவிற்கு கைகொடுத்தது.
Sher hai humara launda 👊 pic.twitter.com/b8HA5GWs2j
— Lucknow Super Giants (@LucknowIPL) April 1, 2025
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் குவித்தது.
பஞ்சாப் கிங்ஸின் அதிரடி ஆட்டம்
172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 69 ஓட்டங்கள் குவித்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ஓட்டங்களும் மற்றும் நேஹல் வதேரா 43 ஓட்டங்களும் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனர்.
Prabhsim𝐑𝐔𝐍-𝐌𝐀𝐂𝐇𝐈𝐍𝐄! 🔥 pic.twitter.com/ak4n7dIFjf
— Punjab Kings (@PunjabKingsIPL) April 1, 2025
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி, ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
A-𝐃𝐔𝐁! 🤌🏻 pic.twitter.com/K1bJBkSMu5
— Punjab Kings (@PunjabKingsIPL) April 1, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |