IPL 2024: பஞ்சாப் கிங்ஸிற்கு மரணஅடி கொடுத்து வெளியேற்றிய RCB
நடப்பு ஐபிஎல் தொடரில் RCB அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
பெங்களூரு அணி 241 ஓட்டங்கள்
தரம்சாலா மைதானத்தில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பாடியது.
விராட் கோலி (92), பட்டிடார் (55), கிரீன் (46) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் பெங்களூரு அணி 241 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் இமாலய இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. பிரப்சிம்ரன் சிங் 6 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரோசோவ் ருத்ர தாண்டவம் ஆடினார்.
92 runs
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 9, 2024
195 strike rate
Overall innings, priceless ?♂️#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #PBKSvRCB @imVkohli pic.twitter.com/IC5cLlm6rZ
பேர்ஸ்டோவ் 16 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷஷாங்க் சிங்கும் அதிரடி காட்டினார்.
வெளியேறிய பஞ்சாப் அணி
இதற்கிடையில் அரைசதம் அடித்த ரோசோவ் 27 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் விளாசினார்.
பின்னர் ஷஷாங்க் சிங் 37 (19) ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார். கார்ன் ஷர்மா, சிராஜ் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் அந்த அணி 17 ஓவரில் 181 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. மேலும், 8வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி தொடரை விட்டு வெளியேறியது. 92 ஓட்டங்கள் விளாசிய கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
Bring out the BA5️⃣0️⃣OKA! ?
— Punjab Kings (@PunjabKingsIPL) May 9, 2024
First fifty of the season for our Protea Powerhouse! ??#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi #TATAIPL2024 #PBKSvRCB pic.twitter.com/U5kaNvtdu4
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |