11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் PBKS: ஷ்ரேயஸ் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் டி20 தொடரின் பரபரப்பான குவாலிஃபையர் 2 ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
மும்பை பேட்டிங்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மும்பையின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 8 ஓட்டங்களிலும் மற்றும் ஜானி பேர்ஸ்டோ 38 ஓட்டங்களும் குவித்தனர்.
அடுத்து இறங்கிய திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் தலா 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
⚠ You are reliving Naman's dashing finish 💪😍#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #PBKSvMIpic.twitter.com/vnBNzaPFal
— Mumbai Indians (@mipaltan) June 1, 2025
ஹர்திக் பாண்டியா (15), நமன் தீர் (37) மற்றும் ராஜ் பாவா (8) ஆகியோரின் பங்களிப்பால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சவாலான 203 ஓட்டங்கள் எடுத்தது.
பஞ்சாப் அபார வெற்றி
204 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ப்ரியான்ஷ் ஆர்யா 20 ஓட்டங்களும்,ப்ரப்சிம்ரன் சிங் வெறும் 6 ஓட்டங்களும் குவித்து வெளியேறினார்.
அடுத்து வந்த ஜோஷ் இங்லிஸ் 38 ஓட்டங்கள் குவித்து பஞ்சாப் அணியின் ஓட்டங்களை அதிகரித்தார்.
भावा आपण जिंकलो! ❤️ pic.twitter.com/xtrbP6Bw9x
— Punjab Kings (@PunjabKingsIPL) June 1, 2025
இருப்பினும் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரின் அதிரடி தான், அவர் 8 சிக்ஸர்களுடன் 87 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.
அவருக்கு உறுதுணையாக நேஹல் வதேரா 48 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
बडे मंच का सरपंच! ❤️ pic.twitter.com/0KnScPuiZw
— Punjab Kings (@PunjabKingsIPL) June 1, 2025
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸை வெளியேற்றி, பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நாளை (ஜூன் 3) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை எதிர்கொள்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |