பிரித்தானியாவுக்கு செல்ல ஆசைப்பட்ட நபர்: கிடைத்த ஏமாற்றம்
பிரித்தானியாவுக்கு செல்ல ஆசைப்பட்ட ஒருவரை வசமாக ஏமாற்றியுள்ளார் ஒரு நபர்.
பிரித்தானியாவுக்கு செல்ல ஆசைப்பட்ட நபர்
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த பலிந்தர் சிங் (34), பிரித்தானியாவுக்கு பயணிக்க ஆசைப்பட்டுள்ளார்.
அவரை பிரித்தானியாவுக்கு அனுப்புவதாக உறுதியளித்த கௌரவ் என்னும் நபர், அவரிடம் 2.4 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார்.

சொன்னதுபோலவே இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, பிரித்தானியா செல்வதற்கான விமான டிக்கெட்கள் மற்றும் அமெரிக்க டொலர்களையும் சிங்கிடம் கொடுத்துள்ளார் கௌரவ்.
ஆனால், விமானம் ஏற செல்லும்போதுதான் சிங்குக்கு தெரியவந்துள்ளது, கௌரவ் கொடுத்த விமான டிக்கெட்களும், அமெரிக்க டொலர்களும் போலியானவை என்பது.
பிரித்தானியா செல்லும் ஆசையிலிருந்த சிங், விமான நிலையம் வரை சென்று பின் ஏமாற்றம் அடைய, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பொலிசில் புகாரளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |