அன்று நகைச்சுவை நடிகர், இன்று முதல்வர்- யார் இந்த பக்வந்த் மான்?
பஞ்சாபில் ஆத் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் பக்வந்த் மான்50 ஆயிரம் வாக்குகளை விடவும் கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில், 91 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் ஆத் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் பக்வந்த் மான், வெற்றி பெறும் முன்னரே பதவியேற்பு முதல் கொண்டாட்டங்கள் வரை அனைத்தையும் திட்டமிட்டு வைத்துள்ளார்.
மேலும் ராஜ்பவனில் பதவியேற்க போவதில்லை என்றும், பகத்சிங்கின் சொந்த ஊரில் பதவியேற்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.
டிவி சேனல்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடையே பிரபலமான பக்வந்த் மான்கடந்த 2014ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.