கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற இந்திய இளம்பெண்: கிடைத்துள்ள துயரச் செய்தி
கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற இந்திய இளம்பெண் ஒருவர் மாரடைப்பால் காலமானதாக கிடைத்துள்ள தகவல், அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்திய இளம்பெண் மாரடைப்பால் மரணம்
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த மன்பிரீத் கௌர் (22), 2022ஆம் ஆண்டு ஆக்த்து மாதம், கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்தார்.
ரொரன்றோவில் வாழ்ந்துவந்த மன்பிரீத் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மன்பிரீத்தின் தந்தையான Kewal Singh, நேற்று அதிகாலை 3.00 மணியளவில் தன் மகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கிறார்.
மன்பிரீத்துக்கு தொடர்ந்து வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நிலையில், சிறிது நேரத்துக்குப்பின் அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக தொடர்ந்து பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் உயிரிழந்துவரும் விடயம், பஞ்சாபில் கவலையை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |