நிச்சயம் செய்யப்பட்டவரை திருமணம் செய்வதற்காக அமெரிக்கா சென்ற இந்தியப் பெண்: கிடைத்த ஏமாற்றம்
தனக்கு நிச்சயம் செய்யப்பட்டவரை திருமணம் செய்வதற்காக அமெரிக்கா சென்ற இந்திய இளம்பெண் ஒருவர் ஏமாற்றத்துடன் நாடு திரும்ப நேர்ந்தது.
இந்தியப் பெண்ணுக்கு கிடைத்த ஏமாற்றம்
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த சுக்ஜீத் கௌர் (26), தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட நபரைத் திருமணம் செய்வதற்காக அமெரிக்கா சென்றார்.
பணத்தை வாங்கிக்கொண்டு ஏஜண்ட் ஒருவர் சுக்ஜீத்தை ஏமாற்றி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் செயலில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
அதன்படி, 19 பெண்கள், 13 சிறுவர்கள் உட்பட, இந்தியர்களான 104 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் நேற்று இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். அவர்களில் சுக்ஜீத்தும் ஒருவர்!
ஆக, ஏராளமான பணத்தை செலவு செய்து தனக்கு நிச்சயம் செய்யப்பட்டவரை திருமணம் செய்துகொள்ளும் ஆசையில் அமெரிக்கா சென்ற சுக்ஜீத்துக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
அத்துடன், அமெரிக்கா செல்வதற்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறது சுக்ஜீத் குடும்பம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |