வெளிநாடு செல்ல முடியாத ஏமாற்றத்தில் இளைஞர் எடுத்த மோசமான முடிவு
வெளிநாடு செல்ல முடியாத ஏமாற்றத்தில், இந்திய இளைஞர் ஒருவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்ட பரிதாப சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
வெளிநாடு செல்ல முடியாத ஏமாற்றத்தில்...
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இரண்டு முறை அவருடைய பெற்றோர் அவரை வெளிநாட்டுக்கு அனுப்ப எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. அதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற நிலையில், 12.00 மணியளவில் மகன் தூங்குவதை உறுதி செய்ய அவரது அறைக்குச் சென்றுள்ளார் அந்த இளைஞரின் தந்தை.
அப்போது அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளது தெரியவரவே, உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர் அவரது குடும்பத்தினர்.
ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மகனை இழந்த அந்தக் குடும்பம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |