புண்ணியம் தரும் புரட்டாசி மாதம்: கடவுள்களின் முழு அருளை பெற வழிபடும் முறை
தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாக வருவது புரட்டாசி மாதமாகும்.இது மகாவிஷ்ணுவிற்கு உரிய மாதமாக கருதப்படுகிறது.
இந்த மாதத்தில் வைணவர்கள் உள்ளிட்ட பலரும் விரதம் இருந்து, பெருமாளை வழிபடுவது வழக்கம்.
புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது மிகப் பெரிய புண்ணிய பலனை தரக் கூடியதாகும்.
புரட்டாசி வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் பெருமாளின் அருள் மட்டுமின்றி குல தெய்வ அருளும் கிடைக்கும்.இந்த மாதத்தில் வைணவர்கள் உள்ளிட்ட பலரும் விரதம் இருந்து, பெருமாளை வழிபடுவது வழக்கம்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளின் அருளை பெற விரதம் இருந்து வழிபடுவது மிகப் பெரிய புண்ணிய பலனை தரக் கூடியதாகும்.
சனி தோஷம் விலகும். புரட்டாசி மாதம் காற்றும், வெயிலும் குறைந்து மழை துவங்கும் மாதம் என்பதால் இந்த மாதத்தில் பல விதமான நோய்கள் பரவ வாய்ப்புள்ளது என்பதால் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதோடு இந்த மாதத்தில் அசைவம் சாப்பிட்டால் அது உடலின் உஷ்ணத்தை அதிகரிக்க செய்யும் என்பதால் புரட்டாசி மாதத்தில் அசைவத்தை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
அம்பிகை வழிபாட்டிற்கு உரிய நவராத்திரி வழிபாடும் வரக் கூடியது இந்த புரட்டாசி மாதத்தில் தான். புரட்டாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பூர்வபட்ச பிரதமை திதியில் துவங்கி நவமி திதி வரையிலான ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும்.
மேலும் சிவனுக்குரிய கேதார கெளரி விரதமும் இந்த மாதத்தில் தான் வரும். இப்படி தெய்வங்களின் அருளை பெறுவதற்கும், முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கும் ஏற்ற மாதமாக விளங்குவதால் புரட்டாசி மாதம் புண்ணியம் தரும் மாதமாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு புரட்டாசி மாதமானது செப்டம்பர் 18 ம் தேதி துவங்கி, அக்டோபர் 17 ம் தேதி வரை உள்ளது. இந்த ஆண்டு புரட்டாசி மாதத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் புரட்டாசி மாதத்தின் துவக்க நாளிலேயே விநாயகர் சதுர்த்தி திருநாளும் வருகிறது.
வழக்கமாக ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் வருவதால் மாதத்தின் முதல் நாளே வழிபாட்டிற்குரிய விரத நாளாக அமைகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |