நிறம் மாறியுள்ள பிரித்தானிய ராணியாரின் கைகள்: மருத்துவர்கள் அளித்த விளக்கம்
பிரித்தானிய ராணியார் ஓய்வில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரது உடல் நலம் தொடர்பில் பலவேறு வதந்திகள் வெளியானது.
லண்டனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பிரித்தானிய ராணியார் கலந்து கொள்ளாத நிலையில், இளவரசர் வில்லியம் மனைவி கேட் மிடில்டன் உரிய மரியாதை செலுத்தினார்.
நீண்ட 22 ஆண்டுகளுக்கு பின்னர் முக்கிய நிகழ்வில் ராணியார் கலந்து கொள்ளாதது பிரித்தானிய மக்களிடையே, கவலையை ஏற்படுத்தியதுடன், அவர் உடல் நிலை குறித்து அரண்மனை மூடி மறைப்பதாகவும் கூறப்பட்டது.
ஊடக பிரபலங்கள் பலர் அந்த சந்தேகத்தை எழுப்பினர். இந்த நிலையில், திடீரென்று ராணியாரின் புகைப்படங்கள் வெளியானது. ஆனால் தற்போது அந்த புகைப்படங்களில் காணப்பட்ட மாறுதல்களை கூர்ந்து கவனித்த பிரித்தானிய மக்கள், ராணியார் உடல் நிலை குறித்து மீண்டும் கவலை தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் ஜெனரல் சர் நிக் கார்ட்டருடன் ராணியார் நேரில் சந்திக்கும் ஒரு புகைப்படத்தை அரண்மனை வெளியிட்டது. அதில், ராணியாரின் கைகள் ஊதா நிறத்திற்கு மாறியிருந்தது, அவரது ஆதரவாளர்கள் கண்களில் பட்டுள்ளது.
புகைப்படத்தை வெளியிட்டு ராணியார் நலமுடன் இருப்பதாகவே அரண்மனை வட்டாரங்கள் நம்பிக்கை அளித்தன. ஆனால் தற்போது அந்த புகைப்படத்திற்கு விளக்கமளிக்கும் நிலைக்கு அரண்மனை மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஷேக்ஸ்பியர் மருத்துவ மையத்தின் மருத்துவர் ஜெய் வர்மா தெரிவிக்கையில், இது ரத்த ஓட்டம் இல்லாமை, பலவீனமான தோல், தோலுக்கு அடியில் உள்ள திசுக்களில் இரத்தம் கசிவு உள்ளிட்ட காரணங்களால் கைகள் ஊதா நிறமாக மாறும் என விளக்கமளித்துள்ளார்.
அக்டோபர் 19ம் திகதிக்கு பின்னர் நீண்ட ஒருமாத காலம் ராணியார் விருந்தினர்கள் எவரையும் சந்திக்கவில்லை. மட்டுமின்றி மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி அவர் ஓய்வெடுத்து வருகிறார் எனவும் கூறப்பட்டது.
மேலும், இரண்டு நாட்கள் வட அயர்லாந்து செல்ல திட்டமிட்டிருந்ததையும் அவர் ரத்து செய்தார்.
இந்த நிலையிலேயே, ஒரு மாதத்திற்கு பிறகு ஜெனரல் சர் நிக் கார்ட்டருடன் ராணியார் சந்தித்துக்கொண்ட புகைப்படம் வெளியானது.