அவர் என்னை தள்ளிவிட்டார்... 50 அடி பள்ளத்தில் விழுந்த கர்ப்பிணி பெண்மணியின் மரண வாக்குமூலம்
ஸ்கொட்லாந்தின் எடின்பர்க் பகுதியில் மலை உச்சியில் இருந்து கர்ப்பிணி மனைவியை தள்ளிவிட்டு கொலை செய்த கொடூர கணவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காஷிப் அன்வர் குற்றவாளி
எடின்பர்க் நகரில் நடந்த நீதிமன்ற விசாரணையில் 31 வயதான சட்டத்தரணி பௌசியா ஜாவேத் மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையை கொலை செய்த விவகாரத்தில் 29 வயதான காஷிப் அன்வர் குற்றவாளி என நிரூபணமானது.
@PA
மட்டுமின்றி, நீதிமன்ற விசாரணையில் பெளசியா ஏற்கனவே தமது கணவரால் பலமுறை கொடூர துன்புறுத்தலுக்கு இரையாகியுள்ளது அம்பலமானது. இதுவே, 2021 செப்டம்பர் மாதம் அவரது மரணத்திற்கும் காரணமாக அமைந்தது என தெரியவந்தது.
மேலும், உடற்கூராய்வில் பெளசியாவின் உடலில் அவர் தாக்கப்பட்டதற்கு ஆதாரமாக பல அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டன. மேற்கு யார்க்ஷயரில் புட்சே பகுதியை சேர்ந்த இந்த தம்பதி எடின்பர்க் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தான் பெளசியா ஹோலிரூட் மலை உச்சியில் இருந்து 50 அடி பள்ளத்தில் தள்ளி விடப்பட்டார். சம்பவத்தின் போது 17 வார கர்ப்பிணியான பெளசியா, குற்றுயிராக மீட்கப்பட்டபோது, தம்மை கணவர் தள்ளிவிட்டதாக மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.
கணவர் என்னை தள்ளிவிட்டார்
ஆனால் இதை மொத்தமாக மறுத்த அன்வருக்கு எதிராகவே ஆதாரங்கள் அனைத்தும் திரட்டப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை அவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.
@PA
மேலும், மலை உச்சியில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெளசியா, முதலில் தம்மை சந்தித்த 24 வயது Daniyah Rafique என்பவரிடம், தயவு செய்து எனது கணவரை எனக்கு அருகே நெருங்க விடவேண்டாம், அவர் தான் என்னை மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டார் என கூறியுள்ளார்.
சம்பவயிடத்தில் மீட்ப்புக்குழு ஊழியர் ஒருவரிடம் அன்வர் தெரிவிக்கையில், புகைப்படம் எடுக்கும் போது லேசாக தடுமாறியதாகவும், இதில் தமது மனைவி மீது மோதியதில் அவர் விபத்தில் சிக்கினார் என குறிப்பிட்டுள்ளார்.
தமது மனைவியுடனான திருமணத்தை முறித்துக்கொள்ளவே அன்வர் திட்டமிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னணியில் வேறு நோக்கம் அவருக்கு இருக்கிறதா என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை.