உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்கும் புஷ்பா 2 படக்குழு
கூட்ட நெரிசலால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்குவதாக புஷ்பா 2 படக்குழு அறிவித்துள்ளது.
நிதியுதவி
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 4 -ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் வெளியான போது மக்கள் கூட்டம் அலைமோதியது.
அங்கு, அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், 35 வயதுடைய பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். அவரது மகன் மூளைச்சாவடைந்திருந்த நிலையில் நினைவு திரும்பியதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ஹைதராபாத்தில் இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுனின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நிதியுதவி அளிப்பதாக புஷ்பா 2 படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, புஷ்பா 2 பட நடிகர் அல்லு அர்ஜுன் 1 கோடி ரூபாயும், தயாரிப்பு நிறுவனம் சார்பில் 50 லட்ச ரூபாயும், படத்தின் இயக்குநர் சார்பில் 50 லட்ச ரூபாயும் நிதியுதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |