அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்த வழக்கறிஞரின் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தை பார்க்க வந்த ரசிகையின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்த வழக்கறிஞரின் கட்டணம் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன்
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான அல்லு அர்ஜுன், கடந்த வாரம் ஹைதராபாத் நகரில் நடந்த திரையிடலில் ரசிகர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார்.
அதன் போது 39 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் படுகாயமடைந்துள்ளார்.
முதலில் நீதிமன்றம் நடிகருக்கு 14 நாட்கள் போலீஸ் காவலில் தண்டனை விதித்தது, ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
வழக்கறிஞரின் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு 25 லட்ச ரூபாயை இழப்பீடாக அல்லு அர்ஜுன் வழங்கினார்.
அல்லு அர்ஜுன் வழக்கில் மூத்த வழக்கறிஞர் நிரஞ்சன் ரெட்டி வாதிட்டார். அவருக்கு ஒவ்வொரு மணிநேரத்திற்கும் கட்டணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் வழக்கில் அவர் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 5 லட்சம் வரை கட்டணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த தகவல் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
ஜாமீன் பெற்று வந்த நடிகர் அல்லு அர்ஜுன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |