கனடாவில் உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு
கனடாவில், கனடாவில் உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், ஒரே மாதத்தில் 2 மில்லியன் முறை உணவு வங்கிகளை மக்கள் நாடியுள்ளது தெரியவந்துள்ளது.
உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடாவில் உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் மட்டும், 2 மில்லியன் மக்கள் உணவு வங்கிகளை நாடியுள்ளதாக Food Banks Canada அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட ஆறு சதவிகிதமும், 2019ஐ விட 90 சதவிகிதமும் அதிகமாகும்.
மாதம்தோறும் உணவு வங்கிகளை பயன்படுத்தும் 12,000 பேரில் 50 சதவிகிதம் பேர் முழு நேர வேலை செய்பவர்கள் ஆவர். அத்துடன், 60 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் நன்கு கற்றவர்கள், வேலையிலிருப்பவர்கள்.
அதாவது, வேலைக்குச் சென்றும் அவர்களால் குடும்பத்தின் செலவுகளை சமாளிக்க முடியாத நிலை நாட்டில் காணப்படுகிறது.
ஆக, வேலையிலிருப்பவர்கள் கூட மீண்டும் மீண்டும் மாதம்தோறும் உணவு வங்கிகளை நாடிவருவதால், அவர்கள் அனைவருக்கும் உணவளிக்க இயலாத நிலை தொண்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
30 சதவிகிதத்துக்கும் அதிகமான உணவு வங்கிகளில் உணவுப்பொருட்கள் இல்லாத நிலை உருவாகிவிடுகிறது.
இப்படி கஷ்டப்படும் மக்களின் தேவைகளை சந்திக்கவேண்டியது அரசாங்கம், ஆனால், அந்த சுமை முழுவதும் உணவு வங்கிகளில் தோள்களில் விழுந்துள்ளது.
ஆக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளை நேருக்கு நேர் பார்க்கும்போது எனக்குக் கோபம் வருகிறது என்கிறார் உணவு வங்கி ஒன்றை நடத்தும் Matt Noble.
நாட்டில் என்ன நடக்கிறது, மக்களுக்கு எவ்வளவு தேவைகள் உள்ளன என்பதை இந்த அரசியல்வாதிகளிடம் சொன்னால், பதிலுக்கு முதுகை தட்டிக்கொடுத்து, நீங்கள் செய்யும் சேவைக்காக நன்றி என்று மட்டும் கூறிச்சென்றுவிடுகிறார்கள் என்கிறார் Matt Noble.
உணவு வங்கிகள் அமைக்கப்பட்டதற்கான நோக்கமே மாறி, மக்களுக்கு மாதா மாதம், ஆண்டு முழுவதும் உணவளிக்கும் அமைப்புகளாக அவை மாறிவிட்டன.
இதற்காக உணவு வங்கிகள் உருவாக்கப்படவில்லை, மக்களுடைய தேவைகளை அரசு சந்தித்து, உணவு வங்கிகளே இல்லாத ஒரு நிலை உருவாகவேண்டும் என்கிறார் மற்றொரு உணவு வங்கியின் தலைவரான Josh Smee.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |