வெயிலில் இருந்து தப்பிக்க பாக்கெட்டுகளில் வெங்காயத்தை வையுங்கள்! பாஜக அமைச்சரின் டிப்ஸ்
உங்கள் பாக்கெட்டில் வெங்காயம் இருந்தால் வெயில் குறித்து கவலையில்லை என்று பாஜக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
நேற்று மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிடுகிறார். இவர் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்கு வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜோதிராதித்ய சிந்தியா பேசியது
அப்போது அவரிடம் வெப்ப அலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "உங்கள் பாக்கெட்டில் வெங்காயம் இருந்தால் வெப்ப அலை குறித்து கவலையில்லை" என்று கூறினார்.
பொதுவாகவே வெங்காயம் குளிர்ச்சி தருவதாக பார்க்கப்படுகிறது. ஆனால், வெங்காயத்தை உடலில் படும்படி வைத்திருந்தால் உடல்நிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும் என்று நிரூபிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிவப்பு கலரில் உள்ள வெங்காயத்தில் க்வெர்செடின் (quercetin) என அழைக்கப்படும் வேதிப்பொருள் ஹிஸ்டமைன் எதிர்ப்பு (anti-histamine) விளைவை கொண்டதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |