ஆற்றலை சேமிக்க ஜோடியாக குளியல் போடுங்கள்: சுவிஸ் அமைச்சரின் ஆலோசனையால் சர்ச்சை...
ஆற்றலை சேமிப்பதற்காக சுவிஸ் அரசு பல ஆலோசனைகளை தன் மக்களுக்கு தெரிவித்து வருகிறது.
அவற்றில் ஒரு ஆலோசனை சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஆற்றலை சேமிப்பதற்கு ஜோடியாக குளியல் போடுங்கள் என்று சுவிஸ் அமைச்சர் கூறியுள்ள ஆலோசனை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றலை சேமிப்பதற்காக, சுவிஸ் அரசு, உணவை மூடி வைத்து சமைப்பது முதல், வேலை முடிந்ததும் கம்ப்யூட்டரை அணைத்து வைப்பது வரை பல ஆலோசனைகளை தன் மக்களுக்கு தெரிவித்து வருகிறது.
அவ்வகையில் சமீபத்தில் சுவிஸ் சுற்றுச்சூழல் அமைச்சரான Simonetta Sommaruga (62) தெரிவித்த ஒரு ஆலோசனை சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஆற்றலை சேமிப்பதற்காக சேர்ந்து குளியல் போடுங்கள் என அவர் கூற, அதனால் நாடு முழுவதும் சர்ச்சை உருவாக, உடனே தனது ஆலோசனைக்கு விளக்கம் கொடுத்துள்ளார் Simonetta.
அதாவது, தான் அந்த ஆலோசனையை இளைஞர்களுக்கு மட்டுமே அளித்ததாக தெரிவித்துள்ள Simonetta, கூடவே, ஒரு வயதுக்கு மேல் சேர்ந்து குளிப்பது என்பது எல்லோருக்கும் பொருந்தாது என்று வேறு கூறியுள்ளார்.
EDOUARD RIEBEN/REUTERS
அமைச்சரின் கருத்தை விமர்சித்துள்ள ஃபெமினா பத்திரிகையின் ஆசிரியரான Geraldine Savary, அமைச்சர்கள் நமது தனிப்பட்ட வாழ்க்கையின் சின்னச் சின்ன விடயங்களில் கூட தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Simonettaவின் கருத்தை கேலி செய்யும் விதத்தில், தன் பத்திரிகையில் தலையங்கம் எழுதியுள்ள Savary, சுவிஸ் மக்கள் ஆற்றலை மிச்சம் பிடிப்பதற்காக, இரவில் வெப்பமாக்கும் கருவிகளை அணைத்துவிட்டு, காலையில் கணவனும் மனைவியும் தாம்பத்ய உறவும் கொண்டால் வெப்பம் உருவாகும். உடனே இருவரும் சேர்ந்து ஒரு குளியல் போட்டுவிட்டு, தங்கள் வண்டியை வீட்டில் விட்டுவிட்டு, கைகோர்த்தபடி அலுவலகத்துக்குச் செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஆற்றலை சேமிப்பதற்காக ஜோடியாக குளியல் போடும்படி சுவிட்சர்லாந்து ஆலோசனை கூறுவது இது முதல்முறையல்ல. 1985ஆம் ஆண்டு, ஆற்றலை சேமிப்பதற்காக ஜோடியாக குளியல் போட்டால், குறைவான செலவு, இரட்டிப்பு இன்பம் என்று கூறும் கைப்பிரதிகளை சுவிஸ் பெடரல் ஆற்றல் அலுவலகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.