புதன் வக்ர பெயர்ச்சி! இந்த நான்கு ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம்

Horoscope
By Kishanthini 6 மாதங்கள் முன்
Courtesy: boldsky

 புதன் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார். அதைத் தொடர்ந்து புதன் மே 10 ஆம் திகதி ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்க ஆரம்பித்து, ஜூன் 3 ஆம் திகதி வக்ர நிவர்த்தியாகி முற்போக்கு நிலையில் மாறி பயணிப்பார்.

மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியான புதனின் வக்ர பெயர்ச்சியால் 12 ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

மேஷம்

புதன் வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் பேச்சுத் திறன் மேம்படும். இக்காலத்தில் உங்களின் மென்மையான பேச்சால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். உங்கள் சிந்தனை சிறந்ததாக இருக்கும்.

உங்களின் இளைய உடன்பிறப்புகளுடன் சில கருத்து வேறுபாடுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. நிதி நிலையில் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். திடீர் நஷ்டம் ஏற்படலாம். எனவே பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வங்கியில் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

புதன் வக்ர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் பகுப்பாய்வு திறன் மிகவும் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் நன்கு திட்டமிடுவீர்கள். இக்கால கட்டத்தில் நிதி உங்கள் கையில் அதிகம் சேரும். கடந்த கால முதலீடுகளில் இருந்து நன்கு சம்பாதிப்பீர்கள்.

மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில மனநல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கடுமையான தலைவலி மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! புதன் வக்ர பெயர்ச்சியால் இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. நரம்பு கோளாறு மற்றும் தலைச்சுற்றல் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தூக்கமின்மை பிரச்சனைகளையும் சந்திக்கலாம்.

உங்கள் செல்போன்கள், தொலைக்காட்சி பெட்டி, ஸ்பீக்கர்கள் போன்றவற்றை கையாளும் போது கவனமாக இருங்கள். செலவுகள் அதிகமாக இருக்கும், இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி நிதி வளத்தையும் செல்வத்தையும் கொண்டு வரும். இந்த காலத்தில் நீங்கள் பொருட்களை பழுதுபார்ப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் நிறைய செலவிடுவீர்கள்.

உங்கள் பழைய நண்பர்கள் மற்றும் வணிக உறவுகளின் உதவியுடன் நீங்கள் சம்பாதிப்பீர்கள். வியாபாரத்தில் சில முன்னேற்றத்தைக் காணலாம். இக்கால கட்டத்தில் உங்கள் பழைய நண்பர்களுடனான உறவை புதுப்பிப்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி காலமானது முதலீட்டு நோக்கங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் பணம் பெருகும். வியாபாரத்தில் வரும் பிரச்சனைகள் மற்றும் சூழ்நிலைகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். உங்கள் வணிக கூட்டாளிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வீட்டின் சூழல் அமைதியற்று இருக்கும். வீட்டு உறுப்பினர்களிடையே தவறான புரிதல்கள் இருக்கும். சில வீட்டுப் பொருட்களை விற்கவோ அல்லது வாங்கவோ இக்காலத்தில் நீங்கள் ஒப்பந்தம் செய்யலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த புதன் வக்ர பெயர்ச்சியால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் மறதியின் காரணமாக மீண்டும் படிக்க வேண்டியிருக்கும். உங்கள் முதலாளியுடனான உங்கள் உறவு நன்றாக இருக்காது. உங்கள் இமேஜ் பாதிக்கப்படலாம்.

தந்தையுடன் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபடலாம். தொழிலதிபர்கள் பணிக்காக சில பயணத் திட்டங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சியானது நிதி விஷயங்களில் சாதகமாக இருக்காது. இக்காலத்தில் திருட்டு அல்லது மதிப்புமிக்க ஒன்றை இழக்கும் வாய்ப்புகள் உள்ளன. பங்கு சந்தையில் வேலை செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரிக்காது என்பது எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

இக்காலத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி எதையும் செய்யாதீர்கள்.

இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஒவ்வாமை, மன அழுத்தம், பதட்டம் மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பதோடு, அதற்கு அதிக செலவு செய்ய நேரிடும். மாணவர்களுக்கு இந்தக் காலம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த புதன் வக்ர பெயர்ச்சியானது உங்கள் உறவுகளில் குறிப்பாக உங்கள் மனைவியுடன் சில ஏற்ற தாழ்வுகளை கொண்டு வரும். நிறைய தவறான புரிதல்களையும் குழப்பங்களையும் சந்திக்க நேரிடும்.

இந்த காலம் உங்கள் துணையின் ஆரோக்கியத்திற்கு சாதகமாக இல்லை. கூட்டு முயற்சியில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏனெனில் உங்களுக்கு எதிராக சில சதி இருக்கலாம். இந்த காலகட்டத்தில் பணத்தை முதலீடு செய்வது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். டனைத் திரும்பப் பெற முடியாது என்பதால், கடன் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! புதன் வக்ர பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் நன்றாக இருக்காது. திருமண வாழ்வில் சண்டை சச்சரவுகள் இருந்தவர்கள் இந்த நேரத்தில் அதிக பிரச்சனைகளையும் சண்டைகளையும் சந்திக்க நேரிடும்.

பணிபுரிபவர்கள் அல்லது கூட்டு வணிகம் செய்பவர்கள், தங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். பணியிடத்தில் நல்ல பணிக்கான பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் சிறந்த சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் திறன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை உருவாக்குவீர்கள்.

மகரம்

புதன் வக்ர பெயர்ச்சியால் மகர ராசிக்கார மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். உங்கள் பிள்ளைகளின் உடல்நலக்குறைவால் நீங்கள் கவலைப்படலாம்.

சிலர் பாதியில் விட்ட படிப்புக்களை படிக்க தொடங்கலாம். வெளிநாட்டு கல்லூரிகளில் சேர்க்கைக்கு திட்டமிட்டால், இந்த காலகட்டத்தில் நீங்கள் முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்களைப் புத்துணர்ச்சியடையச் செய்ய இந்த காலம் சிறப்பானது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சியால் வீட்டின் சூழல் சிறப்பாக இருக்காது. நிலம் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு இந்தக் காலகட்டம் சிறப்பானது.

குடும்பத்தை விட்டு விலகி வாழ்பவர்கள் வீடு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், வசிக்கும் இடத்தில் மாற்றம் ஏற்படும். உங்கள் தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த புதன் வக்ர பெயர்ச்சியால் உங்கள் பழைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மீண்டும் இணைவதற்கு இந்த காலம் நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உடன் பிறப்புகளுடன் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள்.

பணிபுரிபவர்களுக்கு இந்த காலம் நல்ல பலன்களைத் தரும். உங்கள் அன்புக்குரியவரிடம் உங்கள் எண்ணங்களையும் மனதில் உள்ளதையும் விளக்குவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். இது உங்கள் காதல் உறவுகளில் சில இடையூறுகளை ஏற்படுத்தும்.   

மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Scarborough, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Scarborough, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், Ajax, Canada

25 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு

17 Nov, 2021
மரண அறிவித்தல்

மீசாலை, முரசுமோட்டை

04 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கிளிநொச்சி, நெதர்லாந்து, Netherlands, London End, United Kingdom

04 Dec, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, London, United Kingdom

08 Dec, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, கொழும்பு, கம்பஹா வத்தளை

04 Dec, 2020
37ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், ஆனைப்பந்தி

04 Dec, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Ratingen, Germany

04 Dec, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், Mississauga, Canada

02 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, வாழைச்சேனை, Markham, Canada

04 Dec, 2012
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

கைதடி தெற்கு, மீசாலை வடக்கு

05 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Holland, Netherlands, Newfoundland and Labrador, Canada, Edmonton, Canada, ஜெய்ப்பூர், India, Florida, United States, மேரிலான்ட், United States, Markham, Canada

02 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
35ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, சாவகச்சேரி

04 Dec, 1987
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு

02 Dec, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சென்னை, India

04 Dec, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

22 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி வடக்கு

03 Dec, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, திருகோணமலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2018
மரண அறிவித்தல்

முந்தல், முன்ஸ்ரர், Germany, Mississauga, Canada, Ontario, Canada

02 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில், கொழும்பு, Westlands, Kenya

21 Nov, 2022
மரண அறிவித்தல்

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, Ilford, United Kingdom

22 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Vreden, Germany

30 Nov, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, சுருவில்

30 Nov, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, மெல்போன், Australia

29 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Le Blanc-Mesnil, France

13 Dec, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், அளவெட்டி, யாழ்ப்பாணம்

30 Nov, 2022
மரண அறிவித்தல்

Thampalai, மகாறம்பைக்குளம்

01 Dec, 2022
மரண அறிவித்தல்

பொலிகண்டி, வல்வெட்டித்துறை

01 Dec, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

29 Nov, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, நல்லூர்

28 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புலோலி தெற்கு

30 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

22 Nov, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

26 Nov, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Molde, Norway, Oslo, Norway

26 Nov, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US