ஒரு காலத்தின் புடினுடன் நட்பாக இருந்த பிரான்ஸ் ஜனாதிபதி: தற்போது ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றம்
ஒரு காலத்தின் புடினுடன் நட்பாக இருந்த பிரான்ஸ் ஜனாதிபதி: தற்போது ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றம்
ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் எந்த அளவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் நட்பு பாராட்டினார் என்பது உலகத்துக்கே தெரியும்.
தொடர்ந்து முயற்சி செய்த மேக்ரான்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியபோது, அனைவரும் புடினை கடுமையாக விமர்சிக்க, மேக்ரான் மட்டும் தொடர்ந்து அவரை சந்திக்கவும், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முயன்றுவந்தார்.
போரை நிறுத்த தன்னாலான முயற்சிகள் மேற்கொண்ட மேக்ரானை உலகமே இகழ்ந்தது. அவரது ஆலோசகர்களாக இருந்தவர்களே, இந்த ஆள் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என மோசமாக பேசினார்கள்.
ஆனாலும் மேக்ரான் தொடர்ந்து முயற்சி செய்ய, புடினோ, அசைந்துகொடுக்கவே இல்லை.
மேக்ரானிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்
அப்படி புடினுடன் நட்பு பாராட்டிய மேக்ரான், தற்போது ரஷ்யா குறித்து ஒரு விடயத்தைக் கூறியுள்ளார். அதாவது, அடுத்த ஆண்டு, ஜுலை மாதம் 26ஆம் திகதி முதல், ஆகத்து மாதம் 11ஆம் திகதிவரை, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு பல விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க தடைகள் விதிக்கப்பட்டன.
இருந்தாலும், அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் நடுநிலைமை வகிக்கும் தனி நபர்களாக பங்கேற்க, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
ஆனாலும், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய கொடிகள் நிச்சயம் இடம்பெறமுடியாது என்று கூறியுள்ளார் மேக்ரான்.
குழந்தைகளை நாடுகடத்தி, போர்க்குற்றங்களைச் செய்துள்ள ரஷ்யாவுக்கு, ஒரு நாடு என்னும் முறையில் ஒலிம்பிக்கில் இடம் கிடையாது என்றார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |