ரஷ்ய கப்பலை பிரான்ஸ் பிடித்துவைத்துள்ள விவகாரம்: கொந்தளிக்கும் புடின்
புஷ்பா என அழைக்கப்படும் கப்பல் ஒன்றை பிரான்ஸ் பிடித்துவைத்துள்ள விவகாரம் ரஷ்ய ஜனாதிபதி புடினைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
ரஷ்ய கப்பலை சுற்றி வளைத்த பிரான்ஸ் வீரர்கள்
பிரான்சிலுள்ள Saint-Nazaire என்னுமிடத்தின் அருகிலுள்ள கடற்கரையில் புஷ்பா என பெயரிடப்பட்டுள்ள பிரம்மாண்ட கப்பல் ஒன்று பயணித்த நிலையில், அதை சுற்றி வளைத்தனர்.
சமீபத்தில் டென்மார்க் எல்லைக்குள் நுழைந்த மர்ம ட்ரோன்களுக்கும் இந்த கப்பலுக்கும் தொடர்பிருக்கலாம். அதாவது, அந்த ட்ரோன்கள் இந்த கப்பலிலிருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புஷ்பா கப்பலை பிரான்ஸ் பிடித்துவைத்துள்ளது.
அந்தக் கப்பல் பணியாளர்கள் மிக பயங்கர குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பதால், அவர்கள் சட்டப்படி தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
கொந்தளிக்கும் புடின்
இந்நிலையில், ரஷ்ய நிபுணர்கள் முன் பேசிய ரஷ்ய ஜனாதிபதியான புடின், அந்தக் கப்பல் பிரான்சால் பிடித்துவைக்கப்பட்டுள்ள விடயம், கடற்கொள்ளைக்கு சமம் என்று கூறியுள்ளார்.
அந்தக் கப்பல் எந்த நாட்டில் கடல் எல்லையிலும் இல்லை, நடுநிலையான கடல்பகுதியில் எந்த நியாயமும் இல்லாமல் கைப்பற்றப்பட்டுள்ளது, அதில் ராணுவ தளவாடங்கள் எதுவும் இல்லை.
ஆக, இது கடற்கொள்ளை என்று கூறிய புடின், கடற்கொள்ளையர்களை என்ன செய்யவேண்டும், அவர்களை அழிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், டென்மார்க்குக்குள் ரஷ்ய ட்ரோன்கள் நுழைந்ததாக கூறப்படும் விடயம் குறித்து பேசிய புடின், அந்தக் கதைகளின் பின்னணியில் நேட்டோ இருப்பதாகவும், ஐரோப்பாவில் ராணுவமயமாக்கல் அதிகரித்துவருவதை கவனித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா பழிக்குப் பழிவாங்கவேண்டுமானால், அதற்கு நீண்ட காலம் பிடிக்காது என்று கூறிய புடின், இப்படிப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு கொடுக்கப்படும் பதிலடி, குறிப்பிட்டுக் கூறும் வகையில் இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |