புடினுக்கு நெருக்கமான பாடகி... சுவிட்சர்லாந்தில் விவாதப்பொருளாகியுள்ள விடயம்
புடினுக்கு நெருக்கமானவராக திகழ்ந்த பாடகி ஒருவர் சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பில், சுவிட்சர்லாந்தில் மாறுபட்ட கருத்துகள் உருவாகியுள்ளன.
புடினுக்கு நெருக்கமான பாடகி...
புடினுக்கு நெருக்கமாக இருந்தவரான அன்னா நெட்ரெப்கோ (Anna Netrebko) என்னும் பாடகி இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எதிர்ப்பு உருவானதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் லோசான் நகரம், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மற்றும் ஜேர்மனியின் மியூனிக் நகரில் அவரது இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், சூரிக்கில் அமைந்துள்ள ஓபரா இல்லத்தில் அன்னாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சுவிட்சர்லாந்துக்கான உக்ரைன் தூதர் முதலான சிலர், அன்னா முன்னர் புடினுடன் நெருக்கமாக இருந்தவர் என்பதால், அவரது நிகழ்ச்சியை ரத்து செய்யவேண்டும் என கோரியுள்ளனர்.
ஆனால், 2022க்குப் பிறகு அன்னா ரஷ்யாவில் இசை நிகழ்ச்சி நடத்தவில்லை. ஆக, கலை சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப்படவேண்டும் என ஓபரா அதிகாரிகளும் சூரிக் மாகாண அதிகாரிகளும் வலியுறுத்துகின்றனர்.
ஆகவே, அன்னாவில் இசை நிகழ்ச்சி நடத்தப்படவேண்டும் என்பதில் அதிகாரிகள் உறுதியாக நிற்க, நேற்று அன்னாவின் இசை நிகழ்ச்சிகள் சூரிக் ஓபரா இல்லத்தில் துவங்கியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |