பைடன்-புடின் சந்திப்பின் போது என்ன நடந்தது... ரஷ்ய ஜனாதிபதி எப்படிபட்டவர்? சுவிஸ் ஜனாதிபதி நெகிழ்ச்சி
புடின் சுற்றிவளைத்து பேசவில்லை என சுவிட்சர்லாந்து ஜனாதிபதி Parmelin புகழ்ந்துள்ளார்.
ஜெனீவாவில் பைடன்-புடின் சந்திப்பை ஏற்படாடு செய்த சுவிஸ் ஜனாதிபதி முதல் முறையாக அந்த நிகழ்வு குறித்து பேசியுள்ளார்.
Villa La Grange வந்த பிறகு இரண்டு தலைவர்களும் பேச தொடங்கியது தான் அந்த சந்திப்பின் மிக முக்கியமாக தருணமாக இருந்தது என parmelin கூறினார்.
பைடன்-புடின் இருவரும் சுமார் 5 நிமிடங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தனர், இருவருக்கும் இடையேயான உரையாடல் சிறப்பாக செல்கிறது என உடனடியாக உணர்ந்தேன்.
இரு தலைவர்களின் சந்திப்பை ஏற்பாடு செய்வது அதை முழுவதும் சிறப்பாக முடிக்கும் வரை எனக்கு மனஅழுத்தம் இருந்தது என parmelin கூறினார்.
இதற்கிடையில், சுவிஸ் ஜனாதிபதி புடினின் வெளிப்படையான தன்மையைப் பாராட்டினார்.
புடின் சுற்றிவளைத்து பேசவில்லை, அவர் நேரடியாக பேச வேண்டி விஷயத்தை பேசினார். அவர் முதல் நாம் சொல்வதை முழுமையாக கேட்ட பின் பதிலளிப்பார்.
அவரும் புடினும் தங்கள் கருத்துக்களை மிகவும் இனிமையான சூழ்நிலையில் பரிமாறிக்கொண்டதாக சுவிஸ் ஜனாதிபதி parmelin தெரிவித்துள்ளார்.