புடின் அணு ஆயுதம் வீச குறிவைத்திருக்கும் பிரித்தானிய நகரங்கள்: ஒரு திடுக் தகவல்
புடின் அணு ஆயுதம் வீசினால், எந்தெந்த நாடுகள், எந்தெந்த நகரங்களைத் தாக்குவது என ஒரு ரகசிய பட்டியலே வைத்துள்ளாராம்.
புடின் குறிவைத்திருக்கும் பிரித்தானிய நகரங்கள்
புடின் உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்திருந்தார்.
ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. இந்நிலையில், பல நாடுகளிலுள்ள பல நகரங்கள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அவர் திட்டம் வைத்துள்ளதாக ஒரு திடுக்கிடவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
எந்தெந்த நாடுகள், எந்தெந்த நகரங்களைத் தாக்குவது என அவர் ஒரு பட்டியல் வைத்துள்ளதாக தற்போது தகவல் கசிந்துள்ளது.
புடினுடைய ’hitlist’
அப்படி அணு ஆயுத தாக்குதல் நடத்துவதற்காக புடின் தயாரித்துள்ள பட்டியலில், பிரித்தானிய நகரங்கள் சிலவும் இடம்பெற்றுள்ளன.
இங்கிலாந்திலுள்ள Cumbria, Hull, ஸ்கொட்லாந்தின் தலைநகரான எடின்பர்க் ஆகிய நகரங்களுடன், Barrow-in-Furness என்னுமிடத்திலுள்ள பிரித்தானிய கடற்படையின் அணு நீர்மூழ்கி கப்பல் கட்டும் தளம் புடினுடைய முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளதாம்.
மேலும், Aldershot, Colchester, Portsmouth, Chatham, Tidworth மற்றும் Salisbury ஆகிய இடங்களும் புடினுடைய பட்டியலில் இடம்பெற்றுள்ளனவாம்.
இது குறித்து பேசிய பிரித்தானிய அரசாங்க அலுவலர் ஒருவர், புடினுடைய ’hitlist’ தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களில், அவர், ஒரு உயர் மட்ட தாக்குதல் மற்றும் ஒரு தாழ்மட்ட தாக்குதல் என இரண்டு வகையான தாக்குதல்கள் குறித்து திட்டம் வைத்துள்ளார் என்பது போன்ற விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன என்று கூறியுள்ளார்.
அத்துடன், அப்படி புடின் பிரித்தானிய மண்ணில் வான்வழித் தாக்குதல் நடத்துவாரானால், அது பிரித்தானியா மீதும், நேட்டோ மீதும் போர் பிரகடனம் செய்யப்பட்டதாகவே கருதப்படும் என்றும் கூறியுள்ளார் அந்த அலுவலர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |