புடினுக்கு நெருக்கமான தொழிலதிபர்... தப்பிக்க உதவிய பிரித்தானிய பிரபலத்திற்கு நேர்ந்த கதி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான தொழிலதிபர்களில் ஒருவரான Oleg Deripaska
Bonham-Carter மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்ய தொழிலதிபரை அமெரிக்க பொருளாதார தடைகளில் இருந்து தப்பிக்க உதவிய பிரித்தானிய பிரபலம் கைதாகியுள்ளார்.
பிரித்தானியரான 62 வயது Graham Bonham-Carter என்பவர் தற்போது இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்றே கூறப்படுகிறது.
@getty
செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட Graham Bonham-Carter-ஐ விசாரணை செய்யும் பொருட்டு, தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க அதிகாரிகள் தரப்பு முன்வைத்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான தொழிலதிபர்களில் ஒருவரான Oleg Deripaska-வின் சொத்துக்களை பராமரிக்கவும், நிதியாதாரங்களை வெளிநாடுகளுக்கு திருப்பவும் பிரித்தானிய தொழிலதிபரான Graham Bonham-Carter உதவி வந்துள்ளார்.
54 வயதான Oleg Deripaska கடந்த 2018ல் இருந்தே அமெரிக்க நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளார். மட்டுமின்றி, தொழில்துறை மற்றும் வங்கிகளும் அவருடனான பரிவர்த்தனைகளுக்கு தடை விதித்துள்ளது.
@EPA
இந்த நிலையிலேயே Graham Bonham-Carter தமது பெயரில் துவங்கப்பட்ட புதிய நிறுவனம் சார்பில், ரஷ்ய தொழிலதிபரின் சொத்துக்களை பராமரித்து வந்துள்ளார். மட்டுமின்றி, அமெரிக்காவில் நியூயார்க் சிட்டி மற்றும் வாஷிங்டனில் அமைந்துள்ள 3 குடியிருப்புகளையும் Graham Bonham-Carter தான் பராமரித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கு மூலமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள் வசம் சிக்கியுள்ள தரவுகளின் அடிப்படையில், விதிகளை மீறி 900,000 பவுண்டுகள் தொகை அளவுக்கு Bonham-Carter தமது கட்டுமான தொழிலில் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
தற்போது Bonham-Carter மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.
@REX