உக்ரைன் மீது புடின் படையெடுத்தது ஏன்? பின்னணியை வெட்ட வெளிச்சமாக்கிய போரிஸ்
சுதந்திரமான மற்றும் ஜனநாயக உக்ரைன் அவரது ஆட்சி பாணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் தான், அந்நாட்டின் மீது படையெடுக்க புடின் முடிவெடுத்தார் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
Blackpool-ல் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பேசிய ஜான்சன் இவ்வாறு தெரிவித்தார்.
உக்ரைன் மீதான படையெடுப்பதன் மூலம் புடின் ஒரு பேரழிவுகரமான தவறை செய்துள்ளார் என்பது தெளிவாகிறது.
உக்ரைன் நேட்டோ ராணுவக் கூட்டணியில் சேரப் போகிறது என்பதை புடின் நம்பவில்லை.
அவரது திட்டம் படி படையெடுப்பு தொடர்ந்தால், புடின் உக்ரைனோடு நிறுத்திவிடமாட்டார்.
உக்ரைனில் சுதந்திரம் முடிவு வருவது என்பது, பின்னர் அது ஜார்ஜியாவிலும் மால்டோவாவிலும் சுதந்திரம் மீதான எந்தவொரு நம்பிக்கையும் அழித்துவிடும்.
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயை நாம் சார்ந்து இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர பிரித்தானியா இப்போது துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நமது எரிசக்தி விநியோகத்தின் கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதற்கான நேரம் இது.
இதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்ட ஜான்சன், ஆனால் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கான விளைவு அதைவிட மிக அதிகமாக இருக்கும் என ஜான்சன் கூறினார்.