புடின் ஏற்கனவே மரணமடைந்திருக்கலாம்... விரைவில் தகவல் வெளியாகும்: பிரித்தானிய நிபுணர்
ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே மரணமடைந்திருக்கக்கூடும் என்றும், அது குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் என்றும் பிரித்தானிய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் குறித்து தொடர்ந்து வெளியாகிவரும் தகவல்கள்
உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே, புடினுக்கு புற்றுநோய், பார்க்கின்சன் என தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கடந்த வாரம் புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.
டெலிகிராம் சேனல் ஒன்று, புடின் நேற்று முன்தினம் உயிரிழந்துவிட்டதாகவே செய்தி வெளியிட்டது.
பிரித்தானிய நிபுணர் கூறும் தகவல்
இந்நிலையில், பக்கிங்காம் பல்கலையின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிபுணரான பேராசிரியர் Anthony Glees, ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே மரணமடைந்திருக்கலாம் என்றும் விரைவில் கிரெம்ளின் வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
புடின் மரணமடைந்ததால், ரஷ்ய ஆட்சிப் பொறுப்பு கைமாறுவதால், உக்ரைன் போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பேராசிரியர் Anthony.
Daily Express
புடினுக்குப் பின் யார்?
மேலும், புடின் மரணமடைந்தால், அவருக்கு பதிலாக யார் ரஷ்யாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கக்கூடும் என்பதையும் கணித்துள்ளார் பேராசிரியர் Anthony.
அவ்வகையில், இரண்டு பேருடைய பெயர்களை குறிப்பிட்டுள்ளார் அவர். செசன்ய குடியரசின் தலைவரான Ramzan Akhmadovich Kadyrov மற்றும் ரஷ்ய வேளாண்மைத்துறை அமைச்சரான Dmitry Patrushev.
இவர்கள் இருவர் மட்டுமே ரஷ்ய ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியும் என்றும் கூறியுள்ளார் பேராசிரியர் Anthony.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |