புதின் விரைவில் தோல்வியை தழுவுவார்: பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து!
உக்ரைன் உடனான போரில் ரஷ்ய ஜானதிபதி விளாடிமிர் புதினால் நிச்சியமாக வெற்றிபெற முடியாது என பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் போர் கடுமையாக அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில், பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கு நாடுகளின் ஒற்றுமை குறித்து விவாதிப்பதற்காக நேட்டோ படைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள போலந்து நாட்டிற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது போலந்து நாட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நேட்டோ படைகளில் உள்ள பிரித்தானிய வீரர்களை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனை ரஷ்யாவால் வெற்றிகொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
"Putin's war machine will not succeed in holding down Ukraine".
— Sky News (@SkyNews) March 1, 2022
It's "already clear" that Putin will "ultimately fail" in Ukraine, says PM Boris Johnson, adding that Russia's invasion of Ukraine must be "halted and reversed as soon as possible".https://t.co/X3flQUBL0r pic.twitter.com/E1TiJO0RyC
ரஷ்யாவின் இந்த தோல்வி எப்போதோ தெளிவாகிவிட்டதாகவும், இந்த போரில் ரஷ்ய ஜனாதிபதி புதின், இறுதியில் தோல்வியை நிச்சியமாக தழுவுவார் எனவும் தெரிவித்தார்.
மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த போர் விரைவில் நிறுத்தப்பட்டு, நிலைமை விரைவில் தலைகீழாக மாறும் எனவும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
போலந்து நாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன்பு பிரித்தானியாவில் செய்தியாளர்களை சந்தித்த போரிஸ் ஜான்சன் மேற்கு மற்றும் ஐரோப்பிய கூட்டுநாடுகள் அனைத்தும் "ஒரே குரலாய்" இணைந்து ரஷ்ய ஜனாதிபதி புதின் தோல்வியடைவதை உறுதிசெய்யவேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளார்.