ஏற்கனவே தோற்றது நினைவில்லையா? மேக்ரானை மோசமாக கேலி செய்யும் புடின்
உக்ரைன் போராகத் துவங்கிய விடயம், இன்று எந்தப் பக்கத்திலிருந்து மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற அச்சத்தை உலக மக்களுக்கு உருவாக்கியுள்ளது.
ஆம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டின் தலைவர் போரைத் தூண்டும் வகையில் பேசிக்கொண்டிருக்கிறார்!
அமெரிக்கா கைவிட்டாலும் ஐரோப்பா கைகோர்க்கவேண்டும்
நேட்டோ அமைப்பிலுள்ள ஒரு நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால், மற்ற நாடுகள் அதற்கு உதவவேண்டும்.
ஆனால், உக்ரைன் பிரச்சினையில் கையை விரித்துவிட்டது அமெரிக்கா. உக்ரைனுக்கு அளித்துவந்த அனைத்து உதவிகளையும் நிறுத்திவிட்டார் ட்ரம்ப்.
ஆகவே, ஐரோப்பாவுக்கு பிரச்சினை என்று வந்தால், அமெரிக்கா இனி உதவாது, உக்ரைனைக் கைவிட்டது போல, நம்மையும் ட்ரம்ப் கைவிட்டுவிடக்கூடும் என்னும் எண்ணம் ஐரோப்பிய நாடுகளுக்கு உருவாகத் துவங்கியுள்ளது.
ஆகவே, அமெரிக்கா இல்லையென்றாலும், நாம் ஒன்றிணைந்து நிற்கவேண்டும். ஐரோப்பா உக்ரைனுக்கு உதவவேண்டும் என்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
ஆக, பிரான்சின் அணு ஆயுத பாதுகாப்பை ஐரோப்பாவுடன் பகிர்ந்துகொள்வதாகவும், உக்ரைனுக்கு படைகளை அனுப்பத் தயார் என்றும் கூறியுள்ளார் மேக்ரான்.
பிரான்ஸ் ஜனாதிபதியை மோசமாக கேலி செய்யும் புடின்
ஆனால், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானை மோசமாக கேலி செய்துள்ளார்.
மேக்ரான் தன்னை நெப்போலியன் என்று நினைத்துக்கொண்டுள்ளதாக கேலி பேசும் புடின், ஏற்கனவே ரஷ்யாவை எதிர்க்க நினைத்து பிரான்ஸ் மன்னர் நெப்போலியன் தோற்றது நினைவில்லையா என்று கூறி பிரான்ஸ் வரலாற்றை மோசமாக விமர்சித்துள்ளார்.
மேக்ரானின் குரைப்புதான் பெரிதாக உள்ளது. ஆனால், பிரான்ஸ் ராணுவத்தின் கடி அதற்கு இணையாக வலுவாக இல்லை என கேலி பேசியுள்ளது ரஷ்யா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |