நடுநிலைமை நாடான சுவிட்சர்லாந்தில் புடினால் ஏற்பட்டுள்ள மாற்றம்
சுற்றுலாப்பயணிகளை வரவேற்றோமா, நல்ல வருவாய் வந்ததா, யாருக்கும் எந்த தொல்லையும் இல்லாமல், நாமாயிற்று நம் நாடாயிற்று என எந்த பிரச்சினையில் தலையிடாமல் இருந்த சுவிட்சர்லாந்தை, புடினுடைய உக்ரைன் ஊடுருவல் நிச்சயம் மாற்றிவிட்டிருப்பது நன்கு தெரிகிறது.
ராணுவம் விடுத்துள்ள கோரிக்கை
ராணுவத்துக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்காத சுவிட்சர்லாந்து, உக்ரைன் மீது ரஷ்யா திடீரென போர் தொடுத்ததால், நமக்கும் இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அதாவது, போர் வந்தால் நாம் அதை எப்படி எதிர்கொள்வது என யோசிக்கத் துவங்கியுள்ளது.
சுவிஸ் ராணுவத்தின் தலைவரான Lieutenant General Thomas Sussli, சுவிஸ் ராணுவத்தை பலப்படுத்த 13 பில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான புடினுடைய சட்ட விரோத ஊடுருவல், ஐரோப்பாவின் பாதுகாப்பில் இடைவெளியை உருவாக்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆகவேதான், எதற்கும் தயாராக இருக்கும் விதத்தில் ராணுவத்தை வலுப்படுத்த அவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |