பேரழிவு ஏற்படும் அபாயம்... பிரான்ஸ் ஜனாதிபதியுடன் புடின் பகிர்ந்துள்ள எச்சரிக்கை செய்தி
பிரான்ஸ் ஜனாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியும் சமீபத்தில் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார்கள்.
அப்போது உக்ரைன் இராணுவ தாக்குதல் மூலம் பேரழிவு ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளார் புடின்.
உக்ரைன் படைகள் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதனால் பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானிடம் எச்சரிக்கை தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார் புடின்.
ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழுள்ள Zaporizhzhia நகரில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் தொடர்பில் ரஷ்யாவும் உக்ரைனும் மாற்றி மாற்றி ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பிரான்ஸ் ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடல் ஒன்றின்போது, உக்ரைன் இராணுவம் அணுமின் நிலையம் அமைந்துள்ள Zaporizhzhia பகுதி மீது தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய புடின், அதனால் பெருமளவில் அழிவு ஏற்படலாம் என்றும், பெருமளவிலான பகுதிகளுக்கு அணுக்கதிர் வீச்சு அபாயம் ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
image - reuters
உக்ரைனோ, Zaporizhzhia அணுமின் நிலையத்திலிருந்து உக்ரைனுக்கு மின்சாரம் செல்வதைத் துண்டித்துவிட்டு, அதை ரஷ்யாவுக்கு திருப்பிவிட ரஷ்யா முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
Zaporizhzhia நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டாலும், இன்னமும் அந்த அணுமின் நிலையத்தில் உக்ரைன் பணியாளர்கள்தான் பணியாற்றிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.