ரஷ்ய உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை: புடின் பரிந்துரைத்துள்ள ஜேர்மன் தலைவர்
ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையில் மத்தியஸ்தம் செய்ய முன்னாள் ஜேர்மன் சேன்ஸலர் ஒருவரின் பெயரை பரிந்துரைத்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
புடின் பரிந்துரைத்துள்ள ஜேர்மன் தலைவர்
ரஷ்ய ஜனாதிபதியான புடின், நான்காண்டு ரஷ்ய உக்ரைன் போர் முடிவை நோக்கிச் செல்வதாக தான் கருதுவதாக தெரிவித்துள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு சரியான நபர் என தான் முன்னாள் ஜேர்மன் சேன்ஸலரான Gerhard Schröderஐத்தான் கருதுவதாக புடின் தெரிவித்துள்ளார்.

மொத்த ஐரோப்பிய தலைவர்களிலும், நான் முன்னாள் ஜேர்மன் சேன்ஸலரான Gerhard Schröderஉடன் பேசுவதைத்தான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் புடின்.
ரஷ்யாவுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள Schröder, தனிப்பட்ட முறையில் புடினுடைய நண்பரும் ஆவார்.
அத்துடன், ரஷ்ய உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்திருந்த Schröder, ரஷ்யாவின் படையெடுப்பு சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று கூறியிருந்த அதே நேரத்தில், என்றாலும் ரஷ்யாவை ஒரு நிரந்தர எதிரியாகச் சித்தரிப்பதை நான் எதிர்க்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையில் மத்தியஸ்தம் செய்ய Schröderஇன் பெயரை பரிந்துரைத்துள்ளது குறித்து கருத்து தெரிவிக்க Schröder அலுவலகம் மறுத்துவிட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |