சுவிட்சர்லாந்தில் கமெராக்களைப் பொருத்த விரும்பும் புடின்: அவரது விருப்பம் நிறைவேறுமா?
ரஷ்ய ஜனாதிபதி புடின் சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு இடத்தில் CCTV கமெராக்களைப் பொருத்த விரும்புகிறாராம்.
அவரது விருப்பம் நிறைவேறுமா?
சுவிட்சர்லாந்திலுள்ள Uri மாகாணத்தில் ரஷ்ய இராணுவ வீரர்கள் நினைவாக ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
1799ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், பேரரசர் நெப்போலியனுக்கு எதிரான போர் ஒன்றின்போது உயிரிழந்த ரஷ்ய இராணுவ வீரர்கள் நினைவாக அந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தனை காலமும் அமைதியான நினைவிடமாக, ஒரு சுற்றுலாத்தலமாக விளங்கியது அந்த இடம். ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, அந்த நினைவிடத்தின் அருகே சர்ச்சைக்குரிய விடயங்கள் நடக்கத் துவங்கியுள்ளன.
சில மாதங்களுக்கு முன், அந்த நினைவிடத்தின்மீது உக்ரைன் கொடியிலுள்ள நிறங்களான நீலம் மற்றும் மஞ்சள் நிற பெயிண்டை யாரோ ஊற்றிவிட்டார்கள்.
ஆகவேதான், அந்த இடத்தில் CCTV கமெராக்களைப் பொருத்த விரும்புகிறாராம் புடின்.
ஆனால், அந்த நினைவிடம் மட்டுமே ரஷ்யாவுக்குச் சொந்தமானது. அதைச் சுற்றியிருக்கும் இடம் சுவிட்சர்லாந்துடையது. ஆகவே, சட்டப்படி ரஷ்யாவால் அங்கு CCTV கமெராக்களைப் பொருத்தமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.