ஜேர்மனி முதலான நாடுகளுக்கு புடின் விடுத்துள்ள எச்சரிக்கை
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை எதிர்த்து ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
உக்ரைனில் சிக்கியிருக்கும் தானியங்களை விடுவிப்பதற்கான வழிகளைக் கண்டறிய ரஷ்யா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள புடின், ஆனால், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீதான தடைகளை விலக்கிக்கொள்ளவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.
அத்துடன், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானையும் ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸையும் எச்சரித்த புடின், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது, அந்நாட்டின் நிலைமையை மேலும் நிலைகுலையத்தான் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் சேன்ஸலர் அலுவலகம், புடினுடனான பேச்சுவார்த்தை 80 நிமிடங்கள் நீடித்ததாக தெரிவித்துள்ளது.