ஜேர்மனிக்கு புடின் விடுத்துள்ள எச்சரிக்கை
உக்ரைனுக்கு உதவுவது தொடர்பில், ஜேர்மனிக்கு புடின் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
புடின் விடுத்துள்ள எச்சரிக்கை
ஜேர்மனி உக்ரைனுக்கு Taurus வகை ஏவுகணைகளை வழங்குமானால், அது ஜேர்மனி நேரடியாக ரஷ்யாவுடன் மோதுவதாக கருதப்படும் என்று கூறியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதியான புடின்.
அதாவது, ஜேர்மனி உக்ரைனுக்கு Taurus வகை ஏவுகணைகளை வழங்கும்பட்சத்தில், அவற்றை இயக்குவதற்கு உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் சேட்டிலைட் உளவுத்துறை தகவல்களும், இலக்கை நியமிப்பதற்கு ஜேர்மன் அதிகாரிகளின் உதவியும் தேவைப்படும்.
உக்ரைன் அந்த ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்துமானால், அதற்கு உதவிய ஜேர்மன் அதிகாரிகள், ரஷ்யாவை நேரடியாக தாக்கியது போலாகிவிடும்.
ஆகவேதான், உக்ரைனுக்கு ஜேர்மனி Taurus வகை ஏவுகணைகளை வழங்குவது குறித்து ரஷ்யா எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |