புடின் தன் இலக்கை அடையவே முடியாது... மாற்றி மாற்றி பேசும் ஜேர்மன் சேன்ஸலர்
புடின் உக்ரைனில் தனது இலக்கை அடையவே முடியாது என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.
மாற்றி மாற்றி பேசும் ஜேர்மன் சேன்ஸலர்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததும், பல நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்த நிலையில், ஜேர்மனியோ தனது நிலையை வெளிப்படுத்தத் தயங்கியது.
பின்னர் பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழக்க முன்வந்த நிலையில், அப்போதும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி தயங்கியது.
தன்னிலையை மாற்றிக்கொண்ட ஜேர்மன் சேன்ஸலர்
பிறகு உக்ரைனுக்கு போர் வாகனங்கள் வழங்க இருப்பதாக தெரிவித்தார் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ்.
அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் உக்ரைனுக்குப் போர் வாகனங்கள் வழங்க முன்வந்தது.
இந்நிலையில், உக்ரைனுக்கு உதவுவதை தங்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே தாங்கள் எடுத்துக்கொள்வதாக ரஷ்யா தரப்பு எச்சரித்தது.
அந்தர் பல்டியடித்த ஓலாஃப் ஷோல்ஸ்
திடீரென, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை மிரட்டியதுபோல் தன்னை புடின் மிரட்டியதேயில்லை என ஒரு அறிக்கை விடுத்தார் ஓலாஃப் ஷோல்ஸ்.
இப்போது மீண்டும், புடின் உக்ரைனில் தன் இலக்கை அடையவே முடியாது என்று கூறியுள்ளார் ஓலாஃப் ஷோல்ஸ்.
ரஷ்யாவுக்கெதிரான ஐரோப்பிய ஒன்றிய தடைகள் தொடரும் என்று கூறிய அவர், உக்ரைன் ஐரோப்பாவுக்குச் சொந்தமானது என்றும், உக்ரைனுடைய எதிர்காலம் ஐரோப்பிய ஒன்றியத்தில்தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர், சமீபத்தில், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது நேட்டோவை பிரச்சினைக்குள் இழுக்கும் என்றும், அதனால் பிரச்சினை பெரிதாகும் என்றும் கூறியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்துள்ள ஓலாஃப் ஷோல்ஸ், இது ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் இல்லை, இது உக்ரைனுக்குள் ரஷ்யாவின் ஊடுருவல் என்று கூறியுள்ளார்.