புடின் பிரித்தானியா மீது அணுகுண்டு வீசமாட்டார்... ரிஷியின் திட்டத்தால் பலன் கிடைக்கும்: நிபுணர் பரபரப்பு தகவல்
புடின், பிரித்தானியா மீது அணுகுண்டு வீசமாட்டார், பிரதமர் ரிஷி முன்வைத்துள்ள, 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கட்டாய ராணுவ சேவை திட்டம், புடினுடைய திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்கிறார் நிபுணர் ஒருவர்.
புடின் பிரித்தானியா மீது அணுகுண்டு வீசமாட்டார்
Image: Getty Images
புடின் பிரித்தானியா மீது அணுகுண்டு வீசமாட்டார் என்கிறார், பேராசிரியர் Anthony Glees என்னும் நிபுணர். புடினைப் பொருத்தவரை, அணுகுண்டு வீசினால் அனைவருக்கும் பேரழிவு ஏற்படும் என்பது அவருக்குத் தெரியும். ஆகவே, பாரம்பரிய முறைப்படியான போர் செய்துதான் அவர் வெற்றிபெற விரும்புவார்.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கட்டாய ராணுவ சேவை திட்டம் குறித்து அறிவித்ததும், அதை பலரும் விமர்சிக்கத் துவங்கிவிட்டார்கள். ஆனால், அது நல்ல பலனைத் தரும். காரணம், நம் நாட்டில் போர் செய்ய போதுமான வீரர்கள் இருக்கிறார்கள் என்னும் விடயம், நம் நாட்டின் மீது போர் தொடுப்பதிலிருந்து புடினை பின்வாங்கச் செய்யும் என்கிறார் பேராசிரியர் Anthony.
Image: POOL/AFP via Getty Images
ஆக, அணு ஆயுதங்களாலும் சைபர் தாக்குதல்களாலும் ஒரு நாடு போரில் வெற்றி பெற முடியாது, போர் வீரர்கள் மூலம்தான் வெற்றிபெறமுடியும் என்பதை, ரிஷியின் கட்டாய ராணுவ சேவை திட்டத்தை எதிர்ப்பவர்களும், முறுமுறுப்பவர்களும் புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் அவர்.
Image: Wiki Commons
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |