அது மக்களாட்சி அல்ல: பிரித்தானிய பிரதமர் தேர்வு குறித்து புடின் தெரிவித்துள்ள கருத்து...
பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டுள்ளது மக்களாட்சி முறையின்படி அல்ல என்று கூறியுள்ளார் புடின்.
பிரித்தானியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவைக் குறித்து யோசிக்கவேண்டியது பிரித்தானியாதான் என்கிறார் புடின்.
லிஸ் ட்ரஸ் பிரித்தானிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மக்களாட்சி முறைமையின்படி அல்ல என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டது குறித்து புடினிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது புடின், லிஸ் ட்ரஸ்ஸைத் தேர்ந்தெடுத்தது பிரித்தானிய மக்கள் அல்ல, அவர் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் என்றார்.
இந்த பிரதமர் தேர்வைப் பொருத்தவரை, அரசு மாற்றத்தில் பிரித்தானியாவின் மக்கள் பங்கேற்கவில்லை, ஆளும் கோமகன்கள் சேர்ந்து ஏற்பாடுகளை செய்கிறார்கள் என்றார் அவர்.
இனி ரஷ்யாவுடனான பிரித்தானியாவின் உறவு எப்படி இருக்கும் என புடினிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ரஷ்யாவுடனான உறவு உட்பட, இந்தக் கேள்விகள் குறித்த கன்சர்வேட்டிவ் கட்சியினரின் நிலைப்பாடு நமக்குத் தெரியும், இப்போது ரஷ்யாவுடன் உறவை உருவாக்கிக்கொள்வது அவர்களுடைய வேலை என்றார் புடின்.