சிந்து சொன்ன அந்த வார்த்தைகள் என்னை அழ வைத்தது! சீன வீராங்கனையின் நெகிழ்ச்சி பதிவு
டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சீன தைபே வீராங்கனை Tai Tzu-Ying-வின் நெகிழ்ச்சியான பதிவு வைரலாகி வருகிறது.
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை Chen Yufei தங்கப்பதக்கம் வென்றார்.
Tai Tzu-Ying வெள்ளிப்பதக்கம் வென்றார், இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில், பதக்கம் வழங்கும் விழாவிற்கு பிறகு பிவி சிந்து நேர்மையாக ஊக்கமளித்தது தன்னை அழ வைத்ததாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் Tai Tzu-Ying.
அதில், பதக்கம் வழங்கும் விழாவிற்கு பிறகு பிவி சிந்து என்னை கட்டியணைத்து, இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதாக பாராட்டினார்.
உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என எனக்கு தெரியும், நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள், ஆனால் இன்று உங்களுக்கான நாள் அல்ல என்று என்னிடம் கூறினார்.
சிந்து என்னை தன் கைகளில் பிடித்துக்கொண்டு, தனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னார், அந்த நேர்மையான ஊக்கம் என்னை அழ வைத்தது என்று Tai Tzu-Ying பதிவிட்டுள்ளார்.