காட்டுத்தீயால் உருவாகும் மின்னல்: பிரான்சில் ஒரு அரிய நிகழ்வால் ஆபத்து
பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அரிய நிகழ்வொன்றால் மேலும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.
பிரான்சில் ஒரு அரிய நிகழ்வால் ஆபத்து
பொதுவாக, நீர்நிலைகளிலிருந்து எழும் நீராவி உயர சென்று குளிர்ந்து மேகங்களாகும் என நாம் பள்ளியில் படித்திருக்கிறோம்.
இந்நிலையில், பிரான்சில் காட்டுத்தீயால் எழும் புகை, ’தீ மேகம்’ என்னும் ஒரு விடயத்தை உருவாக்கியுள்ளதை கவனித்துள்ளார்கள் பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள்.

இந்த தீ மேகம், flammagenitus, pyrocumulus cloud என்றும் அழைக்கப்படுகிறது.
அதாவது, காட்டுத்தீயால் எழும் புகை, ஒரு சிறிய மேகத்தை உருவாக்க, அது மேலும் மேலும் பெரிதாகி பெரிய மேகமாக மாற, இந்த மேகம் தன் பங்குக்கு மின்னலை உருவாக்க, அந்த மின்னல் மேலும் புதிய காட்டுத்தீயை உருவாக்கும் பேரபாயம் உள்ளது.

விடயம் என்னவென்றால், பிரான்சுக்கு இந்த தீ மேகம் என்னும் நிகழ்வு ஒரு புதிய அனுபவம் என்பதால் அதை எதிர்கொள்வது பிரான்ஸ் நாட்டு தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதற்கிடையில், இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வுகளுக்கு, மனிதனால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றங்களும் காரணம் என்கிறார்கள் சில அறிவியலாளர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |