கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் பிரேக் கோளாறு: சென்னை விமான நிலையத்தில் அலறிய 314 பயணிகள்!
கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் பிரேக் கோளாறு காரணமாக பயணிகள் அலறிய நிலையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
நேற்று அதிகாலை தோஹாவிலிருந்து (Doha) சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு (Chennai International Airport) வந்த கத்தார் ஏர்லைன்ஸ் (Qatar Airways) விமானத்தின் பிரேக் சிஸ்டத்தில் (Brake System) ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
314 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன் வந்த இந்த விமானத்தை, விமானி தனது சாதுர்யமான நடவடிக்கையால் பத்திரமாக தரையிறக்கினார்.
பிரேக் செயலிழந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம்
கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.
திட்டமிட்டபடி அதிகாலை 2:40 மணிக்கு விமானம் தரையிறங்க தயாரானபோது, விமானி மேற்கொண்ட வழக்கமான சோதனையில் விமானத்தின் பிரேக் சிஸ்டம் திடீரென செயலிழந்தது தெரிய வந்தது.
உடனடியாக, இந்த critical issue குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு (Air Traffic Control) தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவசரகால தரையிறக்கத்திற்கான தீவிர ஏற்பாடுகள்
விமானியின் தகவலை அடுத்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அவசரகால தரையிறக்கத்திற்கான (Emergency Landing) ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டனர்.
ஓடுபாதையில் தீயணைப்பு வண்டிகள், மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர்.
பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருக்க அறிவுறுத்தப்பட்டனர். மேலும், அவசர கால வெளியேறும் வழிகள் சரியாக செயல்படுகிறதா என்பதையும் ஊழியர்கள் உறுதி செய்தனர்.
எதிர்பாராத இந்த சூழ்நிலையால் பயணிகள் மத்தியில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது. இருப்பினும், திறமையாக செயல்பட்ட விமானி எந்தவித அசம்பாவிதமும் நேராமல், குறிப்பிட்ட நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
விமானம் தரையிறங்கியதும், அதில் இருந்த 314 பயணிகளும் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |