கத்தாரில் விடுவிக்கப்பட்ட 8 இந்திய கடற்படை வீரர்கள்: ஷாருக்கானுக்கு எந்தப் பங்கும் இல்லை...
கத்தாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் இந்திய மாலுமிகளை விடுவித்ததில் ஷாருக்கானுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அவரது குழு தெரிவித்துள்ளது.
ஷாருக் கானின் தலையீட்டால்தான் இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டதாக ஊடகங்களில் பரப்பப்படும் பிரச்சாரத்தில் உண்மையில்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்திய மாலுமிகளின் விடுதலை குறித்து ஷாருக்கான் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும், அவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என்றும் ஷாருக்கின் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவு பார்த்த குற்றச்சாட்டில் கத்தாரில் கைது செய்யப்பட்ட இந்திய மாலுமிகளை விடுவித்ததில் ஷாருக்கானின் பங்கு இருப்பதாக இரண்டு நாட்களாக ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணியசாமியும் செவ்வாய்கிழமை காலை X-இல் தனது பதிவில் இதையே குறிப்பிட்டுள்ளார்.
இந்திய முன்னாள் மாலுமிகளை விடுவிக்க கத்தார் ஷேக்குகளை நம்பவைத்தது மோடி அரசு அல்ல, ஆனால் ஷாருக்கின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Modi should take Cinema star Sharuk Khan to Qatar with him since after MEA and NSA had failed to persuade the Shiekhs of Qatar, Modi pleaded with Khan to intervene , and thus got an expensive settlement from the Qatar Shiekhs to free our Naval officers.
— Subramanian Swamy (@Swamy39) February 13, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Shah Rukh Khan, 8 Naval veterans released from Qatar, Subramanian Swamy, PM Narendra Modi