உலகக் கோப்பையை வென்ற லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா: இது மூன்றாவது முறை
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், மெஸ்ஸியின் ஆதிக்கத்தால் அர்ஜெண்டினா கோப்பையை வென்று சாதித்துள்ளது.
லியோனல் மெஸ்ஸி
கத்தார் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. பிரான்ஸ் அணியுடன் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி மோதி வருகிறது.
@getty
ஆட்டம் தொடங்கிய 23வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி கோல் அடிக்க, இதனைத் தொடர்ந்து 36வது நிமிடத்தில் டி மரியா தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்துள்ளார்.
இந்த நிலையில் முதல் பாதி முடிவில் அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அதிரடியாக முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 28 நாட்களில் மொத்தம் 63 ஆட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இறுதி ஆட்டம் நடந்து வருகிறது.
@getty
முதல் பாதியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்திய நிலையில், இரண்டாவது பாதியில், அதுவரை பிரான்சின் எம்பாப்பே எங்கே என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் 2 நிமிடங்களில் இரண்டு கோல்களை விளாசி 2-2 என பிரான்ஸ் ரசிகர்களுக்கு விந்தளித்தார் அவர்.
ஆனால் மெஸ்ஸி மீண்டும் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்த, அர்ஜென்டினா அணி 3-2 என முன்னிலை பெற்றது. ஆனால் தாம் சளைத்தவன் அல்ல என மீண்டும் நிரூபிக்க, மூன்றாவது கோல் விளாசி பிரான்ஸ் அணியை 3-3 என முன்னிலைக்கு கொண்டுவந்தார் எம்பாப்பே.
@getty
இந்த நிலையில், ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்களுடன் சம நிலையில் இருந்ததை அடுத்து பெனால்டி ஷூட் முறை கொண்டுவரப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வென்று மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியுள்ளது.
@Shutterstock