QR Code Locket மூலம் காணாமல் போன சிறுவன் மீட்பு.., தொழில்நுட்ப வளர்ச்சியால் நெகிழ்ச்சி
கியூஆர் கோடு டாலர் செயின் (QR Code Locket ) உதவியுடன் காணாமல் போன 12 வயது சிறுவன் மீட்கப்பட்டு குடும்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளார்.
12 வயது சிறுவன் மீட்பு
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பையில் உள்ள வொர்லி பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 12 வயது சிறுவன், கடந்த 11 -ம் திகதி மாலை வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்தார்.
இந்நிலையில், சிறுவன் திடீரென காணாமல் போன நிலையில் அக்கம் பக்கத்து இடங்களில் பெற்றோர் தேடினர். இருந்தாலும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
Image created by AI
பின்னர், மும்பை கொலாபாவில் ரீகல் சினிமா சந்திப்பு அருகில் சிறுவன் ஒருவன் தனியாக சுற்றுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, தகவலறிந்த பொலிஸார் அங்கு சென்று சிறுவனை மீட்டனர்.
பின்னர், சிறுவன் கழுத்தில் அணிந்திருந்த செயினில் உள்ள டாலரில் கியூஆர் கோடு (QR Code) இருந்தது. அதனை போன் மூலம் அதிகாரிகள் ஸ்கேன் செய்ததில் பெற்றோரின் மொபைல் எண் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து, பெற்றோரை தொடர்பு கொண்ட பொலிஸார் விவரங்களை சரிபார்த்த பிறகு சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்தனர். மனவளர்ச்சி குன்றிய சிறுவன் காணாமல் போன 6 மணிநேரத்திற்குள் QR Code உதவியுடன் பெற்றோருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த அக்ஷய் என்பவர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக க்யூ.ஆர்.கோடு முறையை கண்டுபிடித்து விநியோகம் செய்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |