காடை இறைச்சி சாப்பிடுவது நல்லது... ஏன் தெரியுமா?
கோழி இனத்தை சேர்ந்த காடை இறைச்சியில் விட்டமின்கள் ஏ, டி, பி12, கே மற்றும் பி காம்ப்ளக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் நிறைந்திருக்கிறது.
இதுதவிர புரதங்களும், சிறிய அளவில் கொழுப்புச்சத்தும் உள்ளது, இதனை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன, அவை என்னவென்று பார்க்கலாம்.
தசை வளர்ச்சிக்கு தேவையான புரதச்சத்துக்கள் இருப்பதால் குருத்தெலும்புகளை பலப்படுத்துகிறது, அதாவது 100 கிராம் காடையில் 22 கிராம் அளவுக்கு புரதம் இருக்கிறது, இது சிக்கனில் உள்ள புரதத்தை விட அதிகம்.
100 கிராம் காடையில் வெறும் 3 கிராம் அளவே கொழுப்புச்சத்து உள்ளது, எனவே உடல் எடையை கட்டுப்படுத்த மற்றும் குறைக்க விரும்பும்நபர்களுக்கு நன்மை பயக்கும். அத்துடன் இதய நோய் உள்ளவர்களுக்கு காடை இறைச்சி மிகச்சிறந்த தேர்வாகிறது.
சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக தேவையான விட்டமின் பி 12 நிறைந்துள்ளது, அதேசமயம் இதில் உள்ள துத்தநாக சத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன.
ரத்த அழுத்தம் உடையவர்கள், நீரிழிவு மற்றும் உடற்பருமனால் அவதிப்படும் நபர்கள் தாராளமாக காடை இறைச்சியை உண்ணலாம்.
மீனுக்கு இணையான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இதய நோய்கள் வராமல் தடுக்கின்றன.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், இரத்த சோகையை குணப்படுத்த உதவுதல், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் என இன்னும் பல நன்மைகள் உள்ளன.
சிறுநீரகம், கல்லீரல், பித்தப்பை ஆகியவற்றில் உருவாகும் கற்களையும் காடை முட்டைகள் தடுக்கும் என்று கூறப்படுகிறது.