இது பாரபட்சமானது.. பிரித்தானியா மீது பிரான்ஸ் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
பிரான்ஸ் பயணிகள் மீது பிரித்தானியா பாரபட்சமான மற்றும் அதிகப்படியான தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை விதித்துள்ளதாக அந்நாட்டு பிரான்ஸ் அமைச்சர் Clement Beanue குற்றம்சாட்டியுள்ளார்.
ஆக்ஸ்ட் 2ம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றி நாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து பிரித்தானியா வரும் இரண்டு டோஸ் போட்ட பயணிகள் தனிமைப்படுத்த தேவையில்லை என பிரித்தானியா போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் உறுதிப்படுத்தினார்.
அம்பர் பட்டியலில் இருந்தாலும் பிரான்ஸூக்கான கடுமையான விதிகள் தொடர்ந்து அமுலில் இருக்கும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் பிரான்சிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என ஷாப்ஸ் கூறினார்.
இந்நிலையில், பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை சுகாதார அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாதது, பிரித்தானியா அரசு அறிவியலை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவுகளை எடுக்கவில்லை என பிரான்ஸ் அமைச்சர் Clement Beanue குற்றம்சாட்டியுள்ளார்.
இது பாரபட்சமானது. பிரித்தானியா அரசு பொது அறிவை பயன்படுத்த வேண்டும் மற்றும் இந்த விஷயத்தை கூடிய விரைவில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என Clement Beanue கூறினார்.