கனடாவில் பெற்ற பிள்ளைகளை கொலை செய்த இந்தியர்: சமீபத்திய தகவல்
கனடாவில், இந்தியர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொலை செய்த வழக்கில், அவர் குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
தந்தையால் பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம்
கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Laval நகரில் வாழ்ந்துவந்த கமல்ஜீத் அரோரா (49) என்பவரது வீட்டில், 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அவரது 11 வயது மகனும் 13 வயது மகளும் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.
அவர்களை அரோரா கொலை செய்ததாகவும், தனது மனைவியான ராமா ராணி அரோராவையும், மூத்த மகள் ஜாஸ்மினையும் கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
விசாரணையின் துவக்கத்தில், அரோரா தற்போது தனது குற்றங்களை ஒப்புக்கொண்டிருந்தார்.
Ryan Remiorz/The Canadian Press
ஆனால், அவர் 2020ஆம் ஆண்டு முதல் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் திட்டமிட்டே தன் பிள்ளைகளைக் கொலை செய்யவில்லை என்றும் அவரது சட்டத்தரணிகள் வாதம் முன்வைத்தார்கள்.
இந்நிலையில், வழக்கில் அரோரா குற்றவாளி என தற்போது நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அரோராவுக்கு ஜாமீனில் வர இயலாத வகையில், 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |